இலக்கை நோக்கி (சிறுகதை)
நாசாநிலையம் அமெரிக்கா...
டைரக்டர் வில்சன் கோபமாக கத்தினார்.. '.. என்ன மயிரையா புடுங்கறீங்க,,?
நாம அனுப்பின சேட்டிலைட் நிலைமை என்ன தெரியுமா..?
அது இந்தியாவில.. தமிழ்நாட்ல.. திருவண்ணாமலை கோவில்மேலே அப்படியே நிக்குது.. இதை கண்டுபுடிக்கவே உங்களுக்கு நாலுநாள் ஆச்சா.. இப்ப என்ன செய்யப்போறீங்க..???
ஒரு தலைமை சைன்டிஸ்ட் பதில் அளித்தார், சார் ...
நாங்க எல்லா முயற்சியும் எடுத்து பார்த்துட்டோம்...
நாம விண்வெளிக்கு அனுப்புன சேட்டிலைட் பூமியை வலம் வரணும்னா.. அந்த திருவண்ணாமலைல இருக்கற சிவலிங்கத்தை தூக்கணும்..
அந்த சிலையில் இருந்து வெளியாகிற சில அபூர்வமான கதிர்வீச்சுக்கள் நம்ம சேட்டிலைட் பாதைல குறுக்கீடு செய்யறதுனால.. அந்த சிவலிங்கத்தை அழிச்சே ஆக வேண்டிய கட்டாயம்..
அது இன்டர்நெஷனல் பிரச்னை.. முதல்ல இந்தியன் கவர்மெண்ட் கிட்ட பர்மிஷன் கேட்க்கணும்.. அப்பறம் தமிழ்நாடு மக்கள் ரொம்பவே சென்டிமென்ட்டல் இடியட்ஸ்..
அவங்க போராட்டம் அதுஇதுனு பெரிய பிரச்சனை பண்ணுவாங்க.
அப்ப என்னதான் பண்ணலாம் ...
பலலட்சம் டாலர் செலவழிச்சு அனுப்பின சேட்டிலைட் வேலை செய்யணும்னா அந்த சிவன் சிலையை தூக்கிடுங்க...
சார் ...
அதுக்கு நான் ஏற்பாடு பண்ணிட்டேன், ஆனா ...
என்ன ஆனா..?
அந்த சிவலிங்கத்தை அங்கே இருந்து தூக்கி எங்கே வச்சாலும் அந்த கதிர்கள் நம்ம சேட்டிலைட்டை இயங்கவிடாது ...
இந்த பாய்ன்ட்டை நானும் யோசிச்சேன்.. இனிமே நம்ம என்ன பண்ணலாம்,,?? அதை டிஸ்கஸ் பண்ணத்தானே உங்களை வரச்சொன்னேன்..
சார்.. அதிரடியா ஒருகாரியம் பண்ணப்போறேன்...
என்ன.. சொல்லித்தொலை..
வரும்வாரம் கார்த்திகைதீபம் ... மக்கள்கூட்டம் அதிகமா இருக்கும் ... அப்போ திருவண்ணாமலை கோவில அதிநவீன வெடிகுண்டு வீசி தகர்க்கிறோம்..
அப்பறம் எதாவது இஸ்லாமிய தீவிரவாத பேரு சொல்லி மக்களையும் பிரச்னையையும் திசை திருப்பறோம்..
இதெல்லாம் நடக்கற காரியமாயா..??
நிச்சயமா நடக்கும்.. நம்ம நாசால உயர் அதிகாரியா பொறுப்புல இருக்கற அஜித்குமார் தமிழ்நாட்டை சேர்ந்தவர்..அவர் தான் இந்த அஜெண்டாவ தலைமை தாங்கி முடிப்பார்..
சரி.. ஏதோ செய்யுங்க.. சீக்கிரமா செஞ்சு தொலைங்க..
*********
கார்த்திகை தீபத்திருநாள்..
அஜித்குமார் தனது நண்பனிடம் பேசிக்கொண்டு இருக்க..
இத்தனை பாதுகாப்பையும் மீறி நம்மால இந்த கோவில்ல அட்டாக் செய்ய முடியுமா.. நண்பன் சந்தேகம் கலந்த பயத்துடன் கேட்டான்.
அஜித்குமார் சிரித்தான்..
முள்ளை முள்ளால் எடுக்க ப்ளான் பண்ணிட்டேன்.. என்ன புரியலயா..?? எந்த சேட்டிலைட்ட இந்த சிவலிங்கம் செயல்படவிடாம தடுக்குதோ. அதே சேட்டிலைட் மூலமாதான் இதை அழிக்கப்போறேன்.. என்னோட சாப்ட்வேர்ல எல்லாமே ரெடி பன்னிட்டேன்..
என்னோட செல் போன்ல நான் 100ன்னு அடிச்சா போதும். பாம்வெடிக்கும்.. அது எங்கே இருந்து வந்து தாக்கும்ன்னு கண்டு பிடிக்கவே போலிஸ்க்கு ஒரு வாரம் ஆகும்.. நாம அதுக்குள்ளே நியூயார்க் போயிடலாம்..
நண்பன் உற்சாகமாக கேட்டான்.. எப்போ அந்தநூறை அழுத்தப்போற..??
இப்பவேதான்.. என்று கூறிய அஜித்குமார் தனது செல்போனை லேப்டாப்போடு இணைத்தான்..
100 என்ற எண்களை அழுத்தினான்.. 1..0..0..
பெரிய் வெடிசத்தம் கேட்க.. மக்கள்கூட்டம் அலறிஒட.. பலபேர் உடல் துண்டாக.. மரணஓலம்...
அஜித்குமார் எழுந்தான்..
சென்னை விமான நிலையம்.. அஜித்குமார் எல்லா ஃபார்மாலிட்டீசும் முடித்துவிட்டு..
விமானம் ஏற காத்துக் கொண்டிருந்தான்.. அப்போது அவனது செல்போன் அழைத்தது.. யார் என்று பார்த்தான்..
Private number என்று இருந்தது..
ஹலோ சொல்லுங்க.. என்றான்..
நான் திருவண்ணாமல ஈஸ்வரன் பேசறேன்..
நீங்க யார்னு தெரியல.. சொல்லுங்க.. என்ன விஷயம்..??
நியூயார்க்ல உங்க வீட்ல தீவிரவாதி.. பாம் அட்டாக் நடந்து இருக்கு.. உங்க மனைவி , குழந்தை ரெண்டு பேருமே இப்போ உயிரோடு இல்ல..
அஜித்குமார் அதிர்ந்தான்..
அவன் அமர்ந்து இருக்கும் இருக்கைக்கு எதிர்.. ஒரு சின்னக் குழந்தையின் படம்..
அந்தப் படத்தில் ஒரு வாசகம் அவன் கண்ணில் பட்டது..
தவறான இலக்கிற்கு.. என்றுமே இயற்கை தவறான இலக்கையே விளைவிக்கும்..
*தமிழ் உணர்வாளன்*
Post a Comment